Sunday, March 3, 2024

CBSE Tamil 9 std PPT

 

CBSE Tamil 9  PPT

https://drive.google.com/drive/folders/1ur5Dm6wZt-dTDj5d1yx6L0LcpZlkhacS

Friday, March 1, 2024

10 std Social Science Board Question Bank


10 std Social Science  Board Question   Bank

https://drive.google.com/drive/folders/1fa_HtI7VzQmvlPBUCggpPCodfCwyA6X4

 syllabus Mind Map reference material

https://ceyoson.blogspot.com/2024/03/class-x-social-science-reference.html
Youtube  link
https://youtu.be/YEOohVs-15s?si=6PUkmejdPTosEnGV

https://youtu.be/WVxentBN5OI?si=Ber8z0eojNCqDyWw

https://youtu.be/LrNi-x10ggc?si=oG3i595rqIrDuZ_5

https://youtu.be/LrNi-x10ggc?si=oG3i595rqIrDuZ_5

https://youtu.be/yhcjWKMZtAM?si=B51wFjpRpAhxmR-9

https://youtu.be/9uD8R7iL-hw?si=zAXGgM2iH7tNEX4a

https://youtu.be/OiPiISLi0DU?si=mifuRiz8V0GFFkVq

10 std Maths question bank

MATHS WORK SHEET   

https://drive.google.com/drive/folders/1Pl8xZWDAia3ZHWspUcS_Z5chTUDBgKDH?usp=drive_link

 Question bank maths
https://drive.google.com/drive/folders/1fY7S41wSg6mPmqw8psKWkG0Qx-CWkO9V

Maths Question paper
https://ceciliasagayam.blogspot.com/2024/03/10-std-maths-question-bank.html

9 std Question Paper

9 std  Question Paper   


https://drive.google.com/drive/folders/1f7rkF8ypBofXwQelsSYe7nkPEOZ89W5A

Thursday, February 29, 2024

10 std Science board question bank


10 std Science board question bank
https://drive.google.com/drive/folders/1ciUBDo1zKKAL2HbU0XP6ULWhNeCTpDYK

Wednesday, February 28, 2024

Tamil CBSE Question Paper

 

CBSE Tamil CBSE Question Paper 2023-24  Std 1- 9 std pdf & word

https://drive.google.com/drive/folders/1Lb5oNl9_cSzUDp2xgCu6iHKbMJpe289i  

Thursday, December 28, 2023

Wednesday, October 18, 2023

10 std -இயல்- 6 - 80 மதிப்பெண் வினாத்தாள்



வகுப்பு :10                               திருப்புதல் தேர்வு III – 2023 – 24 
தமிழ்                                                                                                                         மதிப்பெண் :80

                                                                                                                                                                                                            பகுதி அ
1. பத்தியை படித்து விடையளி                                                                                               5 வேட்கையும் விருப்பமும் மனிதனையே ஏன் உலகத்திலேயே ஆட்டிப்படைக்கும் சுழல் காற்று. சூறாவளி, பொருள் வேட்கை, பொன் வேட்கை,  மண் வேட்கை பலவற்றையும் பற்றி கொண்டு தொல்லை தரும் நச்சரவம். அன் அச்சுரவத்திற்கு மேலும் மேலும் பாலூட்டி வளர்ப்பது ஆசை மனமே. அறத்தில் அழிக்கத் தொடங்கும் ஆழி. பொருள் என தெரிந்தும் அதனை பொறுக்க முடிவதில்லை. நம்மையும் அழுகும் என அறிந்தும் நாம் அதை விட்டு அகல இயலு வதில்லை. ஆசை மிகுதியாக மிகுதியாக பிறர் பொருளைக் கவர வேண்டும் என்ற தீரா எண்ணம் தனியா வேட்கை மனிதனை எப்படி எல்லாமோ அலைகழிக்கின்றது. ஆசை அறுமீன்கள் ஆசை அறுமீன்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமீன்கள் என்பது திருமூலரின் தெய்வ தாரக மந்திரம்.  வேண்டாமையன்ன விழுச்செல்வம் ஈண்டிதில்லை என்பது திருக்குறளின் தனி குரல். பொருள் உலகை வெறுத்து அருள் உலகை நாடிய அருள் ஞானி. போதி மரத்து புத்தர் பிரானின் புனித மொழியும் ஆசை அறுமின் என்பதே. அவர் துன்பத்திற்கு மூல காரணம் ஆசையே என்றார். அழிவின் வழிச்செல்வம் ஆசையே.
 வினாக்கள்
1. அறத்தை அழிக்கத் தொடங்கும் ஆழி எது?
அ. அன்பு     ஆ.    பக்தி இ.  பொருள்       ஈ.அருள் 
2. அரவம் என்பதன் பொருள் யாது ?
அ.. பல்லி      ஆ. முதலை   இ. பாம்பு ஈ.தேள் 
3. அருள் உலகை நாடிய ஞானி 
அ. புத்தர்     ஆ.திருவள்ளுவர் இ.திருமூலர்      ஈ.   திருநாவுக்கரசர் 
4. திருக்குறளில் ஒலித்த தனி குரல் எது?
அ. ஆசை அறுமின்கள் 
ஆ. துன்பத்தின் மூலம் ஆசையே 
இ. வேண்டாமையன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை 
5. ஈசனோடு ஆயினும் ஆசை அறுமீன்கள் எனக் கூறியவர்?
அ. ராமர்    ஆ. சுந்தரர்     இ. திருமூலர் ஈ.திருநாவுக்கரசர் 
2. பத்தியை படித்து விடை தருக                                                                                       5
1947, ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழா கொண்டாடி முடிந்ததும் மறுநாள் காலை நாங்கள் ஒரு குழுவாக வடக்கு சென்றோம். இதுவே வடக்கெல்லை மீட்புக்கான முதல் முயற்சியாக அமைந்தது . ஆசிரியர் மங்களம்கிழார் என்ற சுமார் 55 வயது உடைய பெரியாரின் அழைப்பின் மீது நாங்கள் வடக்கு எல்லைக்கு  சென்றோம். அவர் சிறந்த தமிழர் அறிஞர்.  இந்திய விடுதலைக்கு பிறகு மாநிலங்களை மொழிவாரியாக பிரித்தனர். அப்போது ஆந்திர தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினார். அச்சூழல் அன்று வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ள செய்தவர் தமிழ் ஆசான் மங்களங்கிழார். 
               அவருடன் இணைந்து தமிழரசு கழகம் சென்னையிலும் திருத்தணியிலும் தமிழர் மாநாடு நடத்தியது . சித்தூர் புத்தூர் திருத்தணி ஆகிய இடங்களில் எல்லாம் வடக்கெல்லை போராட்டத்தை தொடங்கியது போராட்டத்தில் ஈடுபட்ட நான் மங்களங்கிழார், விநாயகம் ஏராளமானோர் சிறைப்பட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டு ராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராஜன் பழனி சிறையில் இருந்த மாணிக்கம் ஆகிய இருவரும் சிறையிலேயே உயிர் துறந்தனர்.
       சர்தார் கே. எம்.பணிக்கர் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மொழிமாறி ஆணையம் சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை. மாலவன் குன்று போனால் என்ன வேலவன் குன்றாவது எங்களுக்கு வேண்டும் என்று முழங்கினோம் மீண்டும் பெரும் போராட்டம் தொடங்கியது. அதன் விளைவாக படாஸ்கர் ஆணையம் அமைக்கப்பட்டு திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன.
 வினாக்கள்
1.மங்களங்கிழார் என்பவர் யார்? 
அ வழக்கறிஞர்    ஆ  தமிழறிஞர்   இ.பொறியியலாளர் ஈ.பேச்சாளர் 
2.இந்திய விடுதலைக்கு பிறகு மாநிலங்களை எவ்வாறு பிரித்தனர்?
அ. எல்லை வாரியாக   ஆ.மக்கள் தொகை வாரியாக 
இ.மொழிவாரியாக     ஈ. கலாச்சார ரீதியாக 
3. சித்தூர் மாவட்டம் எந்த மாநிலத்துடன் இணைந்துள்ளது?
அ. கேரளா       ஆ. கர்நாடகம்   இ.தமிழ்நாடு      ஈ.ஆந்திரா 
4. பழனி சிறையில் உயிரிழந்தவர் யார்?
  அ. விநாயகம்      ஆ. தியாகராஜன்   இ.கோவிந்தராஜன்       ஈ. மாணிக்கம் 
5. வேலவன் குன்று எது?
அ. பழனி        ஆ.சபரிமலை   இ.சுவாமிமலை   ஈ.திருத்தணி 

3.பாடலை படித்து விடை தருக                                                                                 5
     உறங்கிகின்ற கும்ப கன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்ற காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்
வினாக்கள் :
1.  இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் யாது ?
2. இப்பாடலின் ஆசிரியர் யார் ?
3. இப்பாடல் எந்த காண்டத்தை சேர்ந்தது ?
4. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் ?
 5. இப்பாடல் வரிகள் யார் யாரிடம் கூறியது ?

4.சான்று தருக                                                                                                                3
1. பொழுது எத்தனை வகைப்படும்?
அ.2.      ஆ.3.       இ.4.      ஈ.6.
2. நண்பகல் எத்திணைக் குறிய  சிறுபொழுது 
 அ.குறிஞ்சி      ஆ.முல்லை   இ.நெய்தல்       ஈ. பாலை 
3. விளரியாழ் எத்திணைக்கு உரியது
அ. குறிஞ்சி      ஆ.மருதம்       இ.நெய்தல்    ஈ.பாலை
4. பாடி மகிழ்ந்தனர்
அ. பெயரெச்சத்தொடர்     ஆ. வினையெச்சத்தொடர்   இ. எழுவாய்த்தொடர்
5. நண்பா எழுது
அ. வினைமுற்றுத்தொடர்   ஆ. எழுவாய்த்தொடர்   இ. விளித்தொடர்

5.கூறியவாறு மாற்றுக                                                                                                            3
1.நெய்தல் சிறுபொழுது கூறுக
அ. நண்பர்கள்      ஆ.மாலை    இ.எற்பாடு        ஈ.வைகறை 
2.கார்காலம் பொருள் தருக 
அ. பனிக்காலம்     ஆ.வெயில்காலம்   இ.மழைக்காலம் ஈ.குளிர் காலம் 
3. முல்லை நிலத்திற்குரிய சிறு பொழுதினை தேர்ந்தெடு 
அ. கார்காலம்      ஆ.குளிர்காலம்      இ.முன்பனி     ஈ.  பின் பணி 
4. பாடினாள் கண்ணகி ( பெயரெச்சத்தொடராக்குக)
அ. கண்ணகி பாடினாள்   ஆ. பாடிய கண்ணகி    இ. பாடும் கண்ணகி
5. கட்டுரையை படித்தாள்
அ. வேற்றுமைதொடர்    ஆ. வேற்றுமைத்தொகை    இ. பெயரெச்சத்தொடர் 

6. இலக்கண குறிப்பு தருக                                                                                3
1. நீலமேனி  -
2. நெடுந்திரை –                   
3.குண்டலமும் குழைகாதும்–
4. ஆடுக –

7. நிரப்புக                                                                                                                 3
1. பொருள் இலக்கணம் --------  வகைப்படும்.
 அ. இரண்டு      ஆ.மூன்று     இ.நான்கு     ஈ.ஐந்து 
2. ஆறு பெரும்பொழுதுகளையும் காலமாக உடைய திணை 
அ. குறிஞ்சி, முல்லை   ஆ. முல்லை, மருதம்   இ. மருதம் ,நெய்தல்     ஈ. நெய்தல், பாலை  
3. ஒரு ஆண்டின் கூறுகளில் ------- என்பார்.
 அ. சிறுபொழுது      ஆ.பெரும்பொழுது     இ. முதற்பொருள் ஈ.கருப்பொருள்
4. முற்றுப்பெறாத வினை, வினைசொல்லைக் கொண்டு முடிவது 
அ. பெயரெச்சத்தொடர்    ஆ. வினையெச்சத்தொடர்    இ. வினைமுற்றுத்தொடர்
5. எழுவாயுடன் பெயர்,வினை,வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது
அ. பெயரெச்சத்தொடர்    ஆ. எழுவாய்த்தொடர்    இ. வினைமுற்றுத்தொடர்
8. குறள் நிரப்புக                                                                                                               2
1. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
------------ கெடக்கெடும்.
அ. காமம்   ஆ. நாமம்     இ. தாமம்
2.குற்றம்  இலானாய்க்  ------------வாழ்வானே 
சுற்றமாச் சுற்றும்  உலகு
அ. குடிசெய்து   ஆ. குடியறிந்து   இ. சுற்றும்
9 செய்யுள் வினாவிற்கு விடை தருக :மூன்று மட்டும்                                                  9
1. வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக 
2. பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறுவதை தொகுத்து எழுதுக
3. கோசல நாட்டின் சிறப்புகள் யாவை?
4. கும்பகர்ணனுக்கான செய்தியாக கம்பராமாயணம் கூறுவன யாது?
5. ‘நும்மில் போல நில்லாது புக்கு’ – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
10. உரைநடை வினாவிற்கு விடை தருக:மூன்று மட்டும்                                                  15
1. கரகாட்டம் பற்றி கூறுக
2. காவடி ஆட்டம் பற்றி கூறுக 
3. விருந்தை எதிர் கொள்ளும் தன்மை குறித்து குறுந்தொகையும், கொன்றை வேந்தனும் கூறுவதை தொகுத்து எழுதுக
4. போல செய்தல் பண்புகளை பின்பற்றி ஆடப்படும் ஆட்டம் எது விவரி.
5. அறவுணர்வும் தமிழர் மரபும் இலக்கியச் சான்றுகள் வழி விளக்குக.

11. கடிதம் . ஏதேனும் ஒன்று                                                                                8
1.நீ வாழும் பகுதியில் பொது மருத்துவமனை அமைத்து தருமாறு நல்வாழ்த்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதுக  
2. குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை பாதியில் நிறுத்திய தோழிக்கு தக்க ஆலோசனைகளை கூறி வழிகாட்டி மீண்டும் கல்வியை தொடரும்படி தோழிக்கு கடிதம் எழுதுக                                       
உமது முகவரி: ஆ மாதினியாள்,15 மணிமேகலை தெரு, சென்னை 40 
12. துணைப்பாட வினாவிற்கு விடை தருக : ஏதேனும் ஒன்று மட்டும்                    10
1. பாய்ச்சல்
2. கோபால்லபுரத்து மக்கள் விருந்தோம்பல் பண்பினை விளக்குக
13. கவிதை எழுதுக                                  3

 
14. கட்டுரை : ஏதேனும் ஒன்று                                                                                            6
1.முன்னுரை,பொருட்காட்சி நுழைவு வாயில், பல்வேறு துறை சார்ந்த பொருட்காட்சிகள், விளக்கப்படங்கள், பேராசிரியரின் விளக்கவுரை,முடிவுரை
2. முன்னுரை – தாய்மொழிக்கல்வி, புதிய கல்விக்கொள்கை, தமிழ் மொழி
வழி சாதித்தல்,தமிழ்மொழி வழிக்கல்வி பயின்ற சாதனையாளர்கள், மொழியின் தனிச்சிறப்பு, இலக்கியச் சான்றுகள்,முடிவுரை.  

Sunday, October 15, 2023

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?
     எழுதும்போது ஒற்றுப் பிழை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரிந்தது போல் தோன்றினாலும் எழுதும் போது நம்மையறியாமல் ஒரு பிழை தோன்றிவிடும். ஒற்று போட  வேண்டிய இடத்தில் போடாமல் விட்டு விடுவோம். வேண்டாத இடத்தில் ஒற்றெழுத்து வந்துவிடும். ஒற்றுப் பிழை, வலிமிகுதல் பிழை, சந்திப்பிழை  என்று பலவாறும் அழைக்கப்படுவது இதுதான். இதற்குச் சிலவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் போதும். ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதலாம்.  

🌹அந்த இந்த எந்த ஆகிய சுட்டுச் சொற்களை அடுத்து ஒற்று இடவேண்டும். அந்தக் காடு, இந்தச் செய்தி, எந்தப் பாட்டு.
🌹அங்கு, இங்கு, எங்கு ஆகிய இடச்சுட்டுகளை அடுத்தும் கட்டாயம் வல்லொற்று வரும். அங்குச் சென்றான், இங்குக் கிடைக்கும், எங்குப் போனாய் ?

🌹ஐ என்கின்ற இரண்டாம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் உறுதியாக ஒற்று மிகும். அன்பைத் தேடி, உண்மையைச் சொல், படித்ததைக் கூறு.

🌹கு என்கின்ற நான்காம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் கட்டாயமாக ஒற்று மிகும். காட்டுக்குச் சென்றான், வந்தவர்க்குக் கிடைத்தது. பாட்டுக்குப் பாட்டு.

🌹அஃறிணைப் பெயரை அடுத்து அதற்கு உடைமையான இன்னொரு பெயர்ச்சொல் வந்தால் கட்டாயம் வலிமிகும். குருவிக் கூடு, மாட்டுக்கொம்பு.
🌹இரண்டு பெயர்ச்சொற்கள் சேர்ந்து ஒரே பொருளைக் குறிக்குமானால் அங்கே வலிமிகும். அதனை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பார்கள். வாழைப்பழம், சிட்டுக்குருவி, வாடைக்காற்று.

🌹ஊர்ப்பெயரை அடுத்து எந்தச் சொல் வந்தாலும் கட்டாயம் வல்லினமெய்யைப் போட்டுவிட வேண்டும். சென்னைக் கல்லூரி, மதுரைத் தமிழ்ச்சங்கம், நெல்லைத் திருவிழா, கோவூர்க்கிழார்.  

🌹இரண்டு பெயர்ச்சொற்களில் முதலாவது உவமை நோக்கில் வந்தால் கட்டாயம் ஒற்று வரும். இதனை உவமைத்தொகை என்பார்கள். தாமரைக்கண், மலைத்தோள்.

 🌹ஒரு பெயர்ச்சொல் ஓரெழுத்தால் மட்டுமே ஆகியிருந்தால் வல்லொற்று தோன்றும். பூக்காடு, தீப்பிழம்பு.

🌹டு, று என்று முடியும் பெயர்ச்சொற்கள் இன்னொரு பெயர்ச்சொல்லோடு இரட்டித்து வரும் இடங்களில் கட்டாயம் வலிமிகும். வயிற்றுப்பசி, காட்டுத்தடம், ஆற்றுத்தண்ணீர்.

🌹ம் என்று முடியும் பெயர்ச்சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் ம் மறைந்து ஒற்று தோன்றும். மாவட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர், மாநிலக் குழு.

🌹. இரண்டு வினைச்சொற்கள் தொடராக வரும்போது பெரும்பாலும் வலிமிகும். ஆடிச் சென்றான், அள்ளிக் கொடுத்தான், எடுத்துச் சென்றாள், முடித்துக் காட்டு  (மென்தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் விதிவிலக்கு – எழுந்து சென்றான், செய்து கொடுத்தான்)

🌹 ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்குக் கட்டாயம் வலிமிகும். ஓடாக் குதிரை, செல்லாக் காசு, வாராக்கடன்.

🌹ஒரு பொருளின் அளவு, நிறம், வடிவம் சார்ந்த பண்புப் பெயர்களோடு சேர்த்து அப்பொருளைச் சொன்னால் கட்டாயம் வலிமிகும் – நெட்டைத்தென்னை, வெள்ளைச் சட்டை, வட்டத்தொட்டி.

இவை தொடக்கநிலை உதவிக் குறிப்புகள். இவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் பெரும்பான்மையான ஒற்றுப் பிழைகளைத் தவிர்த்துவிடலாம்!!...
🙏🙏🙏🙏

சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய  கேள்வி பதில்கள்....  

கேள்வி:  சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? - 

பதில்:  கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

கேள்வி:  திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. 

பதில்:   திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை. 

கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி?

பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி:  தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –

பதில்:  கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

கேள்வி:  லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? 

பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? 

பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! 

பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!

கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? 

பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா? 

பதில்: சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? 

பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுக்கு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது? 

பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? 

பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது? 

பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’

கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? 

பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்...

சுஜாதாவை ருசிப்பவருக்காக....

தமிழ் திறனறித் தேர்வு 2023 - answer key



 தமிழ் திறனறித் தேர்வு 2023 - answer key

https://drive.google.com/drive/folders/1iW5r2btAlW7RiSHcIR0tUMAjq-eZowsW


36. கேள்விக்குப் பதில் தவறாக உள்ளது. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
சரியான விடை - ஆ) (iii) மற்றும் (iv)

16. கேள்விக்குப் பதில் தவறாக உள்ளது. மூத்தவர் கு.அழகிரிசாமி

39.ஆடிப் பாடி மகிழ்ந்தனர்

63.அகநானூறு

84. அறி+ய்+ஆ+ஏன்

52 வினாவிற்கு சரியான விடை - ஆ) மங்கலங்கிழார்




Thursday, October 12, 2023

தமிழ் திறனறித்தேர்வு 9 ஆம் வகுப்பு online link exam

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-kalviyil.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-kudumba.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yappilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yasothara.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-thavo-jing.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-oliyin.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-periyarin.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-6-9th-tamil-online-test-aakupeyar.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-maduraikanji.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-muthollayiram.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-seevaga.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-india-thesiya.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-4-5-6-25-9th-tamil-online-exam-25.html


https://tamilthugal.blogspot.com/2022/02/9-6-9th-tamil-online-test-punarchi.html

https://tamilthugal.blogspot.com/2022/02/9-6-9th-tamil-online-test-nachiyar.html

https://tamilthugal.blogspot.com/2022/02/9-6-9th-tamil-online-test-ravana.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-6-9th-tamil-online-test-sirpakalai.html


https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-idaichol.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test.html


https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-kudumba.html





Monday, September 18, 2023

10 std Tamil Important questions 2023-24


10 std Tamil Important questions 2023-24

https://drive.google.com/drive/folders/1AsjXc2VLZxEyyr2NgTL0JVhqKQzVWlIE

Sunday, September 17, 2023

10 std Tamil Question Paper

10 std Tamil Question paper -2023-24    

https://drive.google.com/drive/folders/18PHQek2vAdqJQz-jbG--gGFtedcYVgDJ

10 std - work sheet -இயல்-1,2,3,4

 இயல்-1,2,3,4 பணித்தாள் ( work sheet)


https://drive.google.com/drive/folders/18-47G766N2RsVvyyA4WE-5WWZa4HhQJU

Friday, September 15, 2023

இயல்1 எழுத்து - சொல் -இலக்கணம்

 இயல்1  எழுத்து - சொல் -இலக்கணம்   

https://tamilthugal.blogspot.com/2021/06/10th-tamil-online-test-eluthu-sol.html

Thursday, July 6, 2023

10 வகுப்பு - கோபாலபுரத்து மக்கள் (துணைப்பாடம்) இயல் 3

 1. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள     cecilia's space பொருத்தப்பட்டினை  கோபல்லபுறத்து மக்கள் கதை பகுதியை கொண்டு விவரிக்க.
குறிப்புச் சட்டகம்:
* முன்னுரை
*  புதிய மனிதன்
*  லாட  சன்யாசிகள்
* அன்னமய்யாவின் விசாரிப்பு
* வாலிபனின்  பசியை போக்குதல்
* அன்னமய்யா பெயர்  பொருத்தம்
*  கம்மஞ்சோறு துவையலும்
*  முடிவுரை:
முன்னுரை:
 கிராமத்து  வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவு, பகல்  வெப்பத்தில் நடந்து வந்த களைப்பை மறக்கடிக்க செய்துவிடும். பசித்த வேளையில் வந்தவர்களுக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கின்ற நேசம் கிராமத்து விருந்தோம்பல்.  அந்நிகழ்வை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது  கி.  ராஜநாராயணனின் கோபாலபுரத்து மக்களின் கதைப்பகுதி.
புதிய மனிதன்:
சுப்பையாவின் புஞ்சையில் அருகு (களை) எடுத்துக் கொண்டிருந்தவர்கள்,  இடையில் காலைக் கஞ்சியை குடிக்க உட்காருந்தார்கள்.  அப்பொழுது தொலைவில் அன்னமய்யாவுடன்  ஒருவர் வருவதைப் பார்த்தார்கள், அங்கிருந்த ஒருவர் "வரட்டும் வரட்டும் ஒரு வயதுக்கு கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்" என்று கூறினார். 
" பகுதுண்டு பல்லுயிர் ஓம்புதல்                                                 நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்ற குறளுக்கு ஏற்ப, அவ்வழியாகச் செல்லும் தேசாந்திகள் இவர்களிடம் தண்ணீரோ  கஞ்சியோ சாப்பிட்டுவிட்டு போவது வழக்கம்.
புதிய மனிதன்:
அன்னமய்யாவுடன் வந்தவன் தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாடிய நடையுடன் காணப்பட்டான். அந்தப் பக்கம் வந்த அன்னமய்யா வாலிபனை அருகில் சென்று பார்த்தான் பசியால் வாடிய முகம் கண்களில் தெரிந்த  அதீத அறிவாற்றல் கவனிக்க கூடியதாக இருந்தது அவன் முகத்தில் சிறு புன்னகையை மட்டும் காட்டினான், பேசுவதற்கு விரும்பாதவன் போல்  இருந்தான்.
லாட  சன்யாசிகள்:
 அந்த சாலை வழியாக பல வகையான தேசாந்திகள் வருவார்கள். அவர்களுள்  முக்கியமானவர்கள் லாட சன்னாவாசிகள் அவர்கள் வேட்டி கட்டிக் கொள்ளும் முறை புதுவிதமாக இருக்கும்.  இதனைப் பார்த்து  கோபால்லபுரத்து  குழந்தைகள் அவர்களைப்  போலவே வேட்டிகட்டி கொண்டு விளையாடுவார்கள்.
அன்னமய்யாவின் விசாரிப்பு:
அன்னமய்யாவை பார்த்தவன் மெண்மையாக சிரித்தான், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். அவன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்த அன்னமையா "அருகில் இருந்து நீச்சத்தண்ணீர் வாங்கி வரவா?" என்று கேட்டான். அந்த வாலிபன் நாமே அங்கு போய்விடலாம் என்பது போல் பார்த்தான்.  அன்னமய்யாவின் உதவியை எதிர்பார்க்காதவனாய் அவனே எழுந்து நடந்து சென்றான். அன்னமய்யாவின் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே மாதிரியான சிரிப்பை பதிலாக்கினான்.
வாலிபனின்  பசியை போக்குதல்:
ஒரு வேப்ப மரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் கஞ்சியால் நிரம்பப்பட்டிருந்தன.  சிரட்டையை  துடைத்து அதில்  நீத்து பாகத்தை ஊற்றி அவனிடம் நீட்டினான்.  அக்கஞ்சியை  உறிஞ்சிய  போது அவனுக்குக் கண்கள் சொருகின. மிடறு தொண்டை வழியாக இறங்குவதன் சுகத்தை முகம் சொல்லியது.  "உட்கார்ந்து குடிங்க" என்று உபசரித்தான்.  இரண்டாவது  முறையும் வாங்கிக் குடித்துவிட்டு வேப்பமரத்து  நிழலிலே அவனுக்குச்  சொர்க்கமாய்த் தூங்கச் செய்தது. குழந்தையை பார்க்கும்  அன்னையைப் போல் பிரியத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா.
அன்னமய்யா பெயர் பொருத்தம்:
வந்தவன் தூங்கி எழுந்ததும் அவனைச் சுப்பையாவின் புஞ்சைக்கு அழைத்துச் சென்றான் அன்னமய்யா.
செல்லும்  வழியிலேயே  தங்களைப் பற்றி இருவரும்  அறிமுகம்  செய்து கொண்டனர். வந்தவர்  தன் பெயர் பரமேஸ்வரன் என்றும்  தன்னை இனிமேல் மணி என்று அழையுங்கள் என்றுகொண்டே சென்றனர்.  அன்னமய்யா  பெயரை  கேட்டதும், அவர் பெயரை மனதிற்குள் திரும்பி திரும்பி சொல்லி பார்த்துக்கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான். 
கம்மஞ்சோறு துவையலும்:
அன்னமய்யாவுடன் வந்த மணியையும்  மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.  அவரையும் தங்களுடன் உண்ணும்படி உபசரித்தார்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டனர். ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்தனர்.  அன்னமய்யாவும் சுப்பையாவும் அவ்வாறு தான் பெற்றுக்கொண்டனர் அச்சோற்று சிறு பள்ளம் செய்து  துவையல் வைத்தனர்.  அவர்கள் அதனை உண்ணுகின்ற வேகம் ஆர்வம் அனுபவிப்பு  இதையெல்லாம் பார்க்கும் போது இந்த உணவு எவ்வளவு ருசியாக இருக்கும்  என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அவனால் அரை உருண்டைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.
முடிவுரை:





Sunday, June 4, 2023

Friday, June 2, 2023

LANGUAGE POLICY (CBSE SCHOOLS)

CBSE meeting held on -26.05.23
Venue : Bhavan's Rajaji Sr. Sec. School
          Minutes of the meeting 
Class I to VIII 
Any language could be Second language however Tamil must be made as  compulsory additional language.
Class IX
Any language could be posted as 
II language.
Additional subject Tamil must be taught.
State government will frame the syllabus. This additional subject will be taken care by state government.
State government has framed a committee along with CBSE Sahodaya members.
Tamil text book will be the same for class IX ( both II and III Language)
Committee will reduce the syllabus with the same Tamil book. Lot of MCQ's will be there.
Weekly 3 periods required for teaching Tamil in Class 9.
Syllabus has been made ready by the Committee. It's gone for approval will be released shortly.
Mark allotment:
80+20( 20 internal assessment+ 40 MCQ   +40 subjective)
This exam will be conducted before class  X board CBSE exam.
They will be given a certificate by State government for this additional  language in Class X.
Periodical test and multiple assessment must be conducted at school level.
We need to register in EMIS portal and they will be given a roll number for board exam.(Basic Tamil)
Have additional language Tamil / Basic Tamil in report card.
Tamil Exams of  Class IX  wil be corrected and recorded by respective schools.
Class X yet to decide.
Class I to VIII  Tamil syllabus will be released probably next year.
Children seeking admission due to transfer also should opt additional  language Tamil which is mandatory.
Teach such students the basics ie alphabet and slowly make them learn the subject.
Communicate the same to parents.
Should ensure qualified Tamil teachers are recruited.
Tamil text book must be used as prescribed by Tamil nadu Government.
        Thank you.

இயல்-1 இலக்கணம் PPT