Wednesday, October 18, 2023

10 std -இயல்- 6 - 80 மதிப்பெண் வினாத்தாள்



வகுப்பு :10                               திருப்புதல் தேர்வு III – 2023 – 24 
தமிழ்                                                                                                                         மதிப்பெண் :80

                                                                                                                                                                                                            பகுதி அ
1. பத்தியை படித்து விடையளி                                                                                               5 வேட்கையும் விருப்பமும் மனிதனையே ஏன் உலகத்திலேயே ஆட்டிப்படைக்கும் சுழல் காற்று. சூறாவளி, பொருள் வேட்கை, பொன் வேட்கை,  மண் வேட்கை பலவற்றையும் பற்றி கொண்டு தொல்லை தரும் நச்சரவம். அன் அச்சுரவத்திற்கு மேலும் மேலும் பாலூட்டி வளர்ப்பது ஆசை மனமே. அறத்தில் அழிக்கத் தொடங்கும் ஆழி. பொருள் என தெரிந்தும் அதனை பொறுக்க முடிவதில்லை. நம்மையும் அழுகும் என அறிந்தும் நாம் அதை விட்டு அகல இயலு வதில்லை. ஆசை மிகுதியாக மிகுதியாக பிறர் பொருளைக் கவர வேண்டும் என்ற தீரா எண்ணம் தனியா வேட்கை மனிதனை எப்படி எல்லாமோ அலைகழிக்கின்றது. ஆசை அறுமீன்கள் ஆசை அறுமீன்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமீன்கள் என்பது திருமூலரின் தெய்வ தாரக மந்திரம்.  வேண்டாமையன்ன விழுச்செல்வம் ஈண்டிதில்லை என்பது திருக்குறளின் தனி குரல். பொருள் உலகை வெறுத்து அருள் உலகை நாடிய அருள் ஞானி. போதி மரத்து புத்தர் பிரானின் புனித மொழியும் ஆசை அறுமின் என்பதே. அவர் துன்பத்திற்கு மூல காரணம் ஆசையே என்றார். அழிவின் வழிச்செல்வம் ஆசையே.
 வினாக்கள்
1. அறத்தை அழிக்கத் தொடங்கும் ஆழி எது?
அ. அன்பு     ஆ.    பக்தி இ.  பொருள்       ஈ.அருள் 
2. அரவம் என்பதன் பொருள் யாது ?
அ.. பல்லி      ஆ. முதலை   இ. பாம்பு ஈ.தேள் 
3. அருள் உலகை நாடிய ஞானி 
அ. புத்தர்     ஆ.திருவள்ளுவர் இ.திருமூலர்      ஈ.   திருநாவுக்கரசர் 
4. திருக்குறளில் ஒலித்த தனி குரல் எது?
அ. ஆசை அறுமின்கள் 
ஆ. துன்பத்தின் மூலம் ஆசையே 
இ. வேண்டாமையன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை 
5. ஈசனோடு ஆயினும் ஆசை அறுமீன்கள் எனக் கூறியவர்?
அ. ராமர்    ஆ. சுந்தரர்     இ. திருமூலர் ஈ.திருநாவுக்கரசர் 
2. பத்தியை படித்து விடை தருக                                                                                       5
1947, ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழா கொண்டாடி முடிந்ததும் மறுநாள் காலை நாங்கள் ஒரு குழுவாக வடக்கு சென்றோம். இதுவே வடக்கெல்லை மீட்புக்கான முதல் முயற்சியாக அமைந்தது . ஆசிரியர் மங்களம்கிழார் என்ற சுமார் 55 வயது உடைய பெரியாரின் அழைப்பின் மீது நாங்கள் வடக்கு எல்லைக்கு  சென்றோம். அவர் சிறந்த தமிழர் அறிஞர்.  இந்திய விடுதலைக்கு பிறகு மாநிலங்களை மொழிவாரியாக பிரித்தனர். அப்போது ஆந்திர தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினார். அச்சூழல் அன்று வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ள செய்தவர் தமிழ் ஆசான் மங்களங்கிழார். 
               அவருடன் இணைந்து தமிழரசு கழகம் சென்னையிலும் திருத்தணியிலும் தமிழர் மாநாடு நடத்தியது . சித்தூர் புத்தூர் திருத்தணி ஆகிய இடங்களில் எல்லாம் வடக்கெல்லை போராட்டத்தை தொடங்கியது போராட்டத்தில் ஈடுபட்ட நான் மங்களங்கிழார், விநாயகம் ஏராளமானோர் சிறைப்பட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டு ராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராஜன் பழனி சிறையில் இருந்த மாணிக்கம் ஆகிய இருவரும் சிறையிலேயே உயிர் துறந்தனர்.
       சர்தார் கே. எம்.பணிக்கர் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட மொழிமாறி ஆணையம் சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை. மாலவன் குன்று போனால் என்ன வேலவன் குன்றாவது எங்களுக்கு வேண்டும் என்று முழங்கினோம் மீண்டும் பெரும் போராட்டம் தொடங்கியது. அதன் விளைவாக படாஸ்கர் ஆணையம் அமைக்கப்பட்டு திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன.
 வினாக்கள்
1.மங்களங்கிழார் என்பவர் யார்? 
அ வழக்கறிஞர்    ஆ  தமிழறிஞர்   இ.பொறியியலாளர் ஈ.பேச்சாளர் 
2.இந்திய விடுதலைக்கு பிறகு மாநிலங்களை எவ்வாறு பிரித்தனர்?
அ. எல்லை வாரியாக   ஆ.மக்கள் தொகை வாரியாக 
இ.மொழிவாரியாக     ஈ. கலாச்சார ரீதியாக 
3. சித்தூர் மாவட்டம் எந்த மாநிலத்துடன் இணைந்துள்ளது?
அ. கேரளா       ஆ. கர்நாடகம்   இ.தமிழ்நாடு      ஈ.ஆந்திரா 
4. பழனி சிறையில் உயிரிழந்தவர் யார்?
  அ. விநாயகம்      ஆ. தியாகராஜன்   இ.கோவிந்தராஜன்       ஈ. மாணிக்கம் 
5. வேலவன் குன்று எது?
அ. பழனி        ஆ.சபரிமலை   இ.சுவாமிமலை   ஈ.திருத்தணி 

3.பாடலை படித்து விடை தருக                                                                                 5
     உறங்கிகின்ற கும்ப கன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்ற காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்
வினாக்கள் :
1.  இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் யாது ?
2. இப்பாடலின் ஆசிரியர் யார் ?
3. இப்பாடல் எந்த காண்டத்தை சேர்ந்தது ?
4. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் ?
 5. இப்பாடல் வரிகள் யார் யாரிடம் கூறியது ?

4.சான்று தருக                                                                                                                3
1. பொழுது எத்தனை வகைப்படும்?
அ.2.      ஆ.3.       இ.4.      ஈ.6.
2. நண்பகல் எத்திணைக் குறிய  சிறுபொழுது 
 அ.குறிஞ்சி      ஆ.முல்லை   இ.நெய்தல்       ஈ. பாலை 
3. விளரியாழ் எத்திணைக்கு உரியது
அ. குறிஞ்சி      ஆ.மருதம்       இ.நெய்தல்    ஈ.பாலை
4. பாடி மகிழ்ந்தனர்
அ. பெயரெச்சத்தொடர்     ஆ. வினையெச்சத்தொடர்   இ. எழுவாய்த்தொடர்
5. நண்பா எழுது
அ. வினைமுற்றுத்தொடர்   ஆ. எழுவாய்த்தொடர்   இ. விளித்தொடர்

5.கூறியவாறு மாற்றுக                                                                                                            3
1.நெய்தல் சிறுபொழுது கூறுக
அ. நண்பர்கள்      ஆ.மாலை    இ.எற்பாடு        ஈ.வைகறை 
2.கார்காலம் பொருள் தருக 
அ. பனிக்காலம்     ஆ.வெயில்காலம்   இ.மழைக்காலம் ஈ.குளிர் காலம் 
3. முல்லை நிலத்திற்குரிய சிறு பொழுதினை தேர்ந்தெடு 
அ. கார்காலம்      ஆ.குளிர்காலம்      இ.முன்பனி     ஈ.  பின் பணி 
4. பாடினாள் கண்ணகி ( பெயரெச்சத்தொடராக்குக)
அ. கண்ணகி பாடினாள்   ஆ. பாடிய கண்ணகி    இ. பாடும் கண்ணகி
5. கட்டுரையை படித்தாள்
அ. வேற்றுமைதொடர்    ஆ. வேற்றுமைத்தொகை    இ. பெயரெச்சத்தொடர் 

6. இலக்கண குறிப்பு தருக                                                                                3
1. நீலமேனி  -
2. நெடுந்திரை –                   
3.குண்டலமும் குழைகாதும்–
4. ஆடுக –

7. நிரப்புக                                                                                                                 3
1. பொருள் இலக்கணம் --------  வகைப்படும்.
 அ. இரண்டு      ஆ.மூன்று     இ.நான்கு     ஈ.ஐந்து 
2. ஆறு பெரும்பொழுதுகளையும் காலமாக உடைய திணை 
அ. குறிஞ்சி, முல்லை   ஆ. முல்லை, மருதம்   இ. மருதம் ,நெய்தல்     ஈ. நெய்தல், பாலை  
3. ஒரு ஆண்டின் கூறுகளில் ------- என்பார்.
 அ. சிறுபொழுது      ஆ.பெரும்பொழுது     இ. முதற்பொருள் ஈ.கருப்பொருள்
4. முற்றுப்பெறாத வினை, வினைசொல்லைக் கொண்டு முடிவது 
அ. பெயரெச்சத்தொடர்    ஆ. வினையெச்சத்தொடர்    இ. வினைமுற்றுத்தொடர்
5. எழுவாயுடன் பெயர்,வினை,வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது
அ. பெயரெச்சத்தொடர்    ஆ. எழுவாய்த்தொடர்    இ. வினைமுற்றுத்தொடர்
8. குறள் நிரப்புக                                                                                                               2
1. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
------------ கெடக்கெடும்.
அ. காமம்   ஆ. நாமம்     இ. தாமம்
2.குற்றம்  இலானாய்க்  ------------வாழ்வானே 
சுற்றமாச் சுற்றும்  உலகு
அ. குடிசெய்து   ஆ. குடியறிந்து   இ. சுற்றும்
9 செய்யுள் வினாவிற்கு விடை தருக :மூன்று மட்டும்                                                  9
1. வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக 
2. பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறுவதை தொகுத்து எழுதுக
3. கோசல நாட்டின் சிறப்புகள் யாவை?
4. கும்பகர்ணனுக்கான செய்தியாக கம்பராமாயணம் கூறுவன யாது?
5. ‘நும்மில் போல நில்லாது புக்கு’ – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
10. உரைநடை வினாவிற்கு விடை தருக:மூன்று மட்டும்                                                  15
1. கரகாட்டம் பற்றி கூறுக
2. காவடி ஆட்டம் பற்றி கூறுக 
3. விருந்தை எதிர் கொள்ளும் தன்மை குறித்து குறுந்தொகையும், கொன்றை வேந்தனும் கூறுவதை தொகுத்து எழுதுக
4. போல செய்தல் பண்புகளை பின்பற்றி ஆடப்படும் ஆட்டம் எது விவரி.
5. அறவுணர்வும் தமிழர் மரபும் இலக்கியச் சான்றுகள் வழி விளக்குக.

11. கடிதம் . ஏதேனும் ஒன்று                                                                                8
1.நீ வாழும் பகுதியில் பொது மருத்துவமனை அமைத்து தருமாறு நல்வாழ்த்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதுக  
2. குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை பாதியில் நிறுத்திய தோழிக்கு தக்க ஆலோசனைகளை கூறி வழிகாட்டி மீண்டும் கல்வியை தொடரும்படி தோழிக்கு கடிதம் எழுதுக                                       
உமது முகவரி: ஆ மாதினியாள்,15 மணிமேகலை தெரு, சென்னை 40 
12. துணைப்பாட வினாவிற்கு விடை தருக : ஏதேனும் ஒன்று மட்டும்                    10
1. பாய்ச்சல்
2. கோபால்லபுரத்து மக்கள் விருந்தோம்பல் பண்பினை விளக்குக
13. கவிதை எழுதுக                                  3

 
14. கட்டுரை : ஏதேனும் ஒன்று                                                                                            6
1.முன்னுரை,பொருட்காட்சி நுழைவு வாயில், பல்வேறு துறை சார்ந்த பொருட்காட்சிகள், விளக்கப்படங்கள், பேராசிரியரின் விளக்கவுரை,முடிவுரை
2. முன்னுரை – தாய்மொழிக்கல்வி, புதிய கல்விக்கொள்கை, தமிழ் மொழி
வழி சாதித்தல்,தமிழ்மொழி வழிக்கல்வி பயின்ற சாதனையாளர்கள், மொழியின் தனிச்சிறப்பு, இலக்கியச் சான்றுகள்,முடிவுரை.  

No comments:

Post a Comment