Thursday, June 10, 2021

10-வகுப்பு,இயல்-5, துணைப்பாடம்-புதிய நம்பிக்கை

                                 இயல் -5

புதிய நம்பிக்கை  - துணைப்பாடம் 

‘புதிய நம்பிக்கை  என்னும் கதையை அதன் அழகு குன்றாமல் சுருக்கி எழுதுக. 

குறிப்புச்சட்டகம்:

*முன்னுரை

*மேரியின் குடும்பம்

*மேரியின் இளமை

*மேரிக்கு ஏற்பட்ட அவமானம்  

*மேரியின்  ஏக்கம்

* உதவிக்கரம்  நீளுதல்

*மேரியின்  கனவும்  களிப்பும்


முன்னுரை:

எந்த ஒரு சமூகம் கல்வி இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகம் அழிவை நோக்கிச் செல்கிறது என்பதாகும்.  அத்தகு சமூகத்தில் பிறந்து கல்வி என்னும் ஒளிச்சுடரைத் தன் கையில் ஏந்தி ஓராயிரம் விளக்கை ஏற்றிய ‘அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்ஸியோல் பெத்யூர் பற்றி “ புதிய நம்பிக்கை என்னும் கதை வழியாக அறிவோம்.

 மேரியின் குடும்பம்:

தந்தை சாம், தாய் பாட்ஸி, பாட்டி பல சகோதர சகோதரிகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பம்.  காலை 5 மணி முதல் மாலை வரை உழைக்கும் குடும்பம். கல்வி அறிவு இல்லாததால் இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

 மேரியின் இளமை:

 தன் குடும்பத்தில் இவள்  மட்டும் வித்தியாசமானவள். தாய் அழைக்கும் போதும் சரி,  பருத்தியின் முதல் பூவைப்  பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதும் சரி, தான் முதலில் செய்ய வேண்டும் என்று எண்ணுபவள்.

 மேரிக்கு ஏற்பட்ட அவமானம்

தன் தாயுடன் வில்சன் வீட்டிற்கு சென்ற மேரி அங்கு குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு வியப்புற்றாலும்   அவள் கண்கள் அங்கிருந்த ஒரு புத்தகத்தின் மீது சென்றது . ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்ற போது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று  பிடுங்கி 'உன்னால் படிக்க முடியாது' என்று கூறினாள். அந்த வார்த்தை அவள் மனதைக் கிழித்தது.  உடனேவீட்டை விட்டு வெளியேறினாள்

மேரியின்  ஏக்கம்:

 கற்றவர்களை தான் இச் சமூகம் மதிக்கும் என்று அவள் உணர்ந்தாள். அன்று முதல் அவள் மனம் ஒன்றை தீர்மானித்தது. 'நான் படிக்க வேண்டும் என்ற ஒற்றை வரி அவள் மனதை அசை போடவைத்தது. தன்  என் ஆசையை தாய் தந்தையிடம்  கூற  சரியான  பதில் இல்லாமல் ஏக்கம் அடைந்தாள்.  ஆனால் மேரி நம்பிக்கையோடு படித்தே ஆக வேண்டும் என்ற உணர்வோடு  இருந்தாள்.

 உதவிக்கரம்  நீளுதல்:

 வயலில் தன் முதுகில் இருந்த  பருத்தி சுமையை இறக்கி வைத்துவிட்டு திரும்புகின்றபோது  தனக்கு அறிமுகம் இல்லாத பெண் நிற்பதைக் கண்டாள். இருவரும் சிரித்தனர். என் பெயர் வில்சன், உன்னைப் போன்ற பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். அதுதான் என் ஆசை. நீ எவ்வளவு சீக்கிரம்  மேயெல் வில்லிக்கு வர முடியுமோ வாஎன்றாள். பதில் கூற முடியாமல் வாயடைத்து நின்றாள்  மேரி.

  தாம் இன்புறுவது உலகுஇன்                                                 புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் “ என்ற குறளுக்கு ஏற்ப மேரிக்கு மிஸ் வில்சன்  உதவிக்கரம் நீட்டினார்

மேரியின்  கனவும்  களிப்பும்:

 தன் வீட்டு மேசை மீது பலகாலமாக இருந்த பைபிளை எடுத்தாள். இதை நான் படித்து விடுவேன், படித்துக் காட்டவும் செய்வேன் என்று கனவு காணத் தொடங்கினாள்.  தந்தை மேரிக்கு சிலேட்டு, பலப்பம் வாங்கித் தந்தார். உடன்பிறப்புகள் சூழ்ந்து மகிழ்ச்சியில் மகிழ்ந்து எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்றனர். நம் சமுதாயத்திற்கு கிடைக்காத கல்வி நம் குடும்பத்திற்குக் கிடைத்ததை எண்ணி  பெருமை அடைந்தாள்.

 மேதகு மேரி  : 

தினம் தினம் புதியதாய் கற்றால் வாழ்வில் மெல்ல உயரத் தொடங்கினாள் .தன்னைச் சூழ்ந்த நிலம் தம்மிடம் வந்த சம்பளக் கணக்கைக்  கேட்டதை எல்லாம் மனதில் அசைபோட்டு புதிய கல்வியால் புதிய நபராக மேரி மாறினாள்.

 பட்டமளிப்பு விழா:

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை உணர்ந்த மேரி, வில்ஸனின்  இளைய  மகள் என்னை அனுமதிக்காவிட்டால் இந்த ஊக்கம் கிடைத்திருக்காது. அச்சிறுமியின்  செயல் எனக்கு நேரிடாவிட்டால் இந்த விருது பெற இயலாது என்று எண்ணி பெருமிதம் அடைந்த மேரிக்கு எழுதப் படிக்கத் தெரியும் என பட்டம் அளித்துச் சிறப்பித்தது. 

மேற்படிப்பு:

  பட்டமளிப்பு விழாவின்போது வில்ஸன் தோளில் மேரியை அனைத்து  ‘நீ எனக்கு என்ன செய்யப் போகிறாய் என்றார். மிஸ் நான் மேலும் படிக்க விரும்புகிறேன் என்றாள். ஆனால் அலைகடலில் அகப்பட்ட கப்பல் கரை சேர இயலாத நிலை போல் இருந்தாள். 

புதிய தோர்  பயணம் :

மீண்டும் தன் பணியைப்  பருத்திக் காட்டில் தொடங்கினார்கள். அப்போது மிஸ் வில்ஸன் அங்கு வந்து ,வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பின குழந்தைகள் படிப்பிற்காக பணம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெறுவதற்குரிய ஆளாக நீதான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறாய் . நீ மேல்படிப்பிற்காக டவுனுக்குப்  போகவேண்டும் தயாராகு என்றார்  மேரியிடம்  .

 ஊரே  கூடுதல் :

 மேரி  மேற்படிப்பிற்குச்  செல்ல தொடர்வண்டி நிலையத்தில்  ஊரே ஒன்று கூடியது, குட்பை மேரி, குட்பை வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்தி விடை கொடுத்தனர் .

முடிவுரை :

சாதாரணப் பெண்ணாக பிறந்து தனது முயற்சியாலும் பலரது உதவியாலும் வாழ்வில் உயர்ந்து, சமுதாயத்தின் அறியாமை இருளைப் போக்க தோன்றிய மேரி ஜென்னின் வாழ்வியல் நிகழ்வுகளைப் போல நாமும்  அவமானங்களையும் வெகுமானமாக மாற்றி வாழ்வில் வெற்றி பெறுவோம்.

No comments:

Post a Comment