குறிப்புச் சட்டகம்:
* முன்னுரை
* புதிய மனிதன்
* லாட சன்யாசிகள்
* அன்னமய்யாவின் விசாரிப்பு
* வாலிபனின் பசியை போக்குதல்
* அன்னமய்யா பெயர் பொருத்தம்
* கம்மஞ்சோறு துவையலும்
* முடிவுரை:
முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவு, பகல் வெப்பத்தில் நடந்து வந்த களைப்பை மறக்கடிக்க செய்துவிடும். பசித்த வேளையில் வந்தவர்களுக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கின்ற நேசம் கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது கி. ராஜநாராயணனின் கோபாலபுரத்து மக்களின் கதைப்பகுதி.
புதிய மனிதன்:
சுப்பையாவின் புஞ்சையில் அருகு (களை) எடுத்துக் கொண்டிருந்தவர்கள், இடையில் காலைக் கஞ்சியை குடிக்க உட்காருந்தார்கள். அப்பொழுது தொலைவில் அன்னமய்யாவுடன் ஒருவர் வருவதைப் பார்த்தார்கள், அங்கிருந்த ஒருவர் "வரட்டும் வரட்டும் ஒரு வயதுக்கு கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்" என்று கூறினார்.
" பகுதுண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்ற குறளுக்கு ஏற்ப, அவ்வழியாகச் செல்லும் தேசாந்திகள் இவர்களிடம் தண்ணீரோ கஞ்சியோ சாப்பிட்டுவிட்டு போவது வழக்கம்.
புதிய மனிதன்:
அன்னமய்யாவுடன் வந்தவன் தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாடிய நடையுடன் காணப்பட்டான். அந்தப் பக்கம் வந்த அன்னமய்யா வாலிபனை அருகில் சென்று பார்த்தான் பசியால் வாடிய முகம் கண்களில் தெரிந்த அதீத அறிவாற்றல் கவனிக்க கூடியதாக இருந்தது அவன் முகத்தில் சிறு புன்னகையை மட்டும் காட்டினான், பேசுவதற்கு விரும்பாதவன் போல் இருந்தான்.
லாட சன்யாசிகள்:
அந்த சாலை வழியாக பல வகையான தேசாந்திகள் வருவார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் லாட சன்னாவாசிகள் அவர்கள் வேட்டி கட்டிக் கொள்ளும் முறை புதுவிதமாக இருக்கும். இதனைப் பார்த்து கோபால்லபுரத்து குழந்தைகள் அவர்களைப் போலவே வேட்டிகட்டி கொண்டு விளையாடுவார்கள்.
அன்னமய்யாவின் விசாரிப்பு:
அன்னமய்யாவை பார்த்தவன் மெண்மையாக சிரித்தான், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். அவன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்த அன்னமையா "அருகில் இருந்து நீச்சத்தண்ணீர் வாங்கி வரவா?" என்று கேட்டான். அந்த வாலிபன் நாமே அங்கு போய்விடலாம் என்பது போல் பார்த்தான். அன்னமய்யாவின் உதவியை எதிர்பார்க்காதவனாய் அவனே எழுந்து நடந்து சென்றான். அன்னமய்யாவின் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே மாதிரியான சிரிப்பை பதிலாக்கினான்.
வாலிபனின் பசியை போக்குதல்:
ஒரு வேப்ப மரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் கஞ்சியால் நிரம்பப்பட்டிருந்தன. சிரட்டையை துடைத்து அதில் நீத்து பாகத்தை ஊற்றி அவனிடம் நீட்டினான். அக்கஞ்சியை உறிஞ்சிய போது அவனுக்குக் கண்கள் சொருகின. மிடறு தொண்டை வழியாக இறங்குவதன் சுகத்தை முகம் சொல்லியது. "உட்கார்ந்து குடிங்க" என்று உபசரித்தான். இரண்டாவது முறையும் வாங்கிக் குடித்துவிட்டு வேப்பமரத்து நிழலிலே அவனுக்குச் சொர்க்கமாய்த் தூங்கச் செய்தது. குழந்தையை பார்க்கும் அன்னையைப் போல் பிரியத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா.
அன்னமய்யா பெயர் பொருத்தம்:
வந்தவன் தூங்கி எழுந்ததும் அவனைச் சுப்பையாவின் புஞ்சைக்கு அழைத்துச் சென்றான் அன்னமய்யா.
செல்லும் வழியிலேயே தங்களைப் பற்றி இருவரும் அறிமுகம் செய்து கொண்டனர். வந்தவர் தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் தன்னை இனிமேல் மணி என்று அழையுங்கள் என்றுகொண்டே சென்றனர். அன்னமய்யா பெயரை கேட்டதும், அவர் பெயரை மனதிற்குள் திரும்பி திரும்பி சொல்லி பார்த்துக்கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.
கம்மஞ்சோறு துவையலும்:
அன்னமய்யாவுடன் வந்த மணியையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அவரையும் தங்களுடன் உண்ணும்படி உபசரித்தார்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டனர். ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்தனர். அன்னமய்யாவும் சுப்பையாவும் அவ்வாறு தான் பெற்றுக்கொண்டனர் அச்சோற்று சிறு பள்ளம் செய்து துவையல் வைத்தனர். அவர்கள் அதனை உண்ணுகின்ற வேகம் ஆர்வம் அனுபவிப்பு இதையெல்லாம் பார்க்கும் போது இந்த உணவு எவ்வளவு ருசியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அவனால் அரை உருண்டைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.
முடிவுரை:
No comments:
Post a Comment