இயல்- 4- துணைப்பாடம்
1. விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை என்னும் தலைப்பில் துணைப்பாடக் கட்டுரை எழுதுக.
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- இளமைக் காலம்
- கருந்துளை
- கருந்துளை கோட்பாடு
- முடிவுரை
முன்னுரை: Cecilia's space
அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது; ஐயங்களை நீக்குகிறது; பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது; எண்ணங்களை மாற்றுகிறது. தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து புது உண்மைகளைச் சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
இளமைக்காலம்:
இங்கிலாந்தின் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார் . பக்கவாதம் என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் அவர் மருத்துவ உலகமே மிரண்டு போகும் அளவு மேலும் 53 ஆண்டுகள் வாழ்ந்துகாட்டினார் .1985இல் மூச்சுக்குழாய் தடங்களால் பேசும் திறனை இழந்தார். கன்னத் தசை அசைவு மூலம் தன் கருத்தைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வுகளுக்குத் துணையாகச் செயற்கை நுண்ணறிவுக் கணினி செயல்பட்டது. Cecilia's space
வாழ்க்கைப் பயணம்:
சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடினார். போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜியஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார். பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்றார்.
கருந்துளை:
நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பு எல்லைக்குள் செல்கிற எதுவும், ஏன் ஒளியும் கூட வெளி வரமுடியாது. இதுவே கருந்துளை எனப்படும். கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒருகட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்துவிடும் . Cecilia's space
கருந்துளை கோட்பாடு:
முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அறிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று நிறுவினார். கருந்துளை குறித்த தன்னுடைய ஆய்வை ஐன்ஸ்டைன் போல கோட்பாடுகளாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கியதால் உலகம் கருந்துளை கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது .
முடிவுரை: Cecilia's space
உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ, ஊனமோ ஒருவருக்குக் குறையாகாது. ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ஸ்டீபன் .
****-------*******-----****
8 comments:
Plz give puthiya nambikai thunaipadam
Very Helpful
It so useful for me thankyou
I is supper
Thank you
In kalvikavi website it was available
https://naturebooster.blogspot.com/
Thank you it is helpful
Post a Comment