10 வகுப்பு - கோபாலபுரத்து மக்கள் (துணைப்பாடம்) இயல் 3
1. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள cecilia's space பொருத்தப்பட்டினை கோபல்லபுறத்து மக்கள் கதை பகுதியை கொண்டு விவரிக்க. குறிப்புச் சட்டகம்: * முன்னுரை * புதிய மனிதன் * லாட சன்யாசிகள் * அன்னமய்யாவின் விசாரிப்பு * வாலிபனின் பசியை போக்குதல் * அன்னமய்யா பெயர் பொருத்தம் * கம்மஞ்சோறு துவையலும் * முடிவுரை: முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவு, பகல் வெப்பத்தில் நடந்து வந்த களைப்பை மறக்கடிக்க செய்துவிடும். பசித்த வேளையில் வந்தவர்களுக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கின்ற நேசம் கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது கி. ராஜநாராயணனின் கோபாலபுரத்து மக்களின் கதைப்பகுதி. புதிய மனிதன்: சுப்பையாவின் புஞ்சையில் அருகு (களை) எடுத்துக் கொண்டிருந்தவர்கள், இடையில் காலைக் கஞ்சியை குடிக்க உட்காருந்தார்கள். அப்பொழுது தொலைவில் அன்னமய்யாவுடன் ஒருவர் வருவதைப் பார்...