10 வகுப்பு CBSE - கடைசி நேர திருப்புதல்.

 இலக்கணக்குறிப்புகள் எளிமையாய் அறிந்து கொள்க

1. பெயரெச்சம்    ( 'அ ' மறைந்து வரும் )   எ.கா   வந்த மனிதன் 

2.வினையெச்சம்    ( 'இ '   'உ' மறைந்து வரும் )

எ.கா  முட்டி பார்த்தான்  சென்று வந்தான் 

3.வியங்கோள் வினைமுற்று   ( 'க ' கடைசியாக  வரும் ) எ.கா   வாழ்க

4. உரிச்சொல் தொடர்  ( முதல் எழுத்து "மா" வரும் பெரும்பாலும்)

எ.கா மாநகர் 

(மேலும் *சால,உறு,தவ* என தொடங்கினாலும் உரிச்சொல் தொடர் ஆகும்.

எ.கா  சாலச் சிறந்தது

5. அடுக்குத்தொடர்  (வந்த சொல்லே மீண்டும் வந்து பொருள் தருவது)

எ.கா வெல்க வெல்க 

6.இரட்டைக்கிளவி  (வந்த சொல்லே மீண்டும் வந்து பொருள் தராது)

எ.கா குடு குடு

7.எண்ணும்மை   ( இரண்டு "ம்" வரும் )

எ.கா காடனுக்கும் கபிலனுக்கும்

8. உம்மைத்தொகை  ( இரண்டு "ம்" மறைந்து வரும் )

எ.கா தாய் தந்தை

9. பண்புத்தொகை   ( "மை" மறைந்து வரும் )

எ.கா  செங்காந்தள், (செம் *மை* + காந்தள்)

10.வினைத்தொகை (பகுதி கட்டளைச்சொல்     எ.கா  விரி மலர்

**************************************

இலக்கணத்தில் வரும்  எண்ணிக்கைகளை  நினைவில் கொள்க 


(இரண்டு  - பொழுது, அளபெடை,  நிரல்  நிறை பொருள்கோள்,  அஃறிணை) 

                                        (மூன்று - மொழி, உயிரளபெடை,  உயர்திணை,  இடம்) 

ஐந்து - நிலம் ,பால்

ஆறு - வினா,தொகைநிலை,பெரும்பொழுது கூறு, சிறு பொழுது கூறு

ஏழு - வழு,வழாநிலை, அகத்திணைகள் 

( எட்டு - விடை,பொருள்கோள்) (ஒன்பது – தொகாநிலை) (பத்து – சார்பெழுத்துகள்)

                        **********

            கட்டுரை மேற்கோள் 

உணவு,உடற்பயிற்சி, சுகாதாரம்  பற்றி வந்தால் 

" சுத்தம் சோறு போடும்" 

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு "

"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " - திருமூலர்

"சுற்றுச்சூழல் காப்போம்

சுகமாய் வாழ்வோம் "

தமிழ் மொழி பற்றி வந்தால் 

" கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 

- புறப்பொருள் வெண்பாமாலை

"உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் " - பாரதிதாசன் 

"யாமறிந்த மொழிகளிலே  தமிழ்மொழி போல் இனிதெங்கும் காணோம்" - பாரதியார்

( அன்னை மொழியே பாடல் வரிகளையும் பயன்படுத்தலாம் )

 *அறிவியல் பற்றி* 

"அறிவியல் அறிவோம் 

அகிலத்தை ஆள்வோம்"

 சாலைப்பாதுகாப்பு பற்றி 

"சாலைப் பாதுகாப்பு 

உயிர்ப் பாதுகாப்பு "

" சாலை விதியை மதி 

 சாகாமலிருக்க அதுவே கதி "

" எவனோ ஓட்டினாலும் தலைக்கவசம் 

எமனை ஓட்டவும் தலைக்கவசம் "

 மரங்கள் பற்றி

" மரங்களை வளர்ப்போம் 

  மனித குலம் காப்போம் "

" மரந்தான் அதனை மனிதன் மறந்தான் "

மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்

'காடுகள் நாட்டின் அரண்'

'காட்டு வளமே, நாட்டு வளம்'

 நீர் பற்றி 

'விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி'

'நீரின்றி அமையாது உலகு

'மழைநீர் சேமிப்பு, நிலத்தடிநீர் பாதுகாப்பு'

'மழை வேண்டின், மரம் நடுவீர்'

பொதுவானவை

'பாலைவனம் சோலைவனமாக வேண்டும், பசுங்கிளிகள் அங்கிருந்து பாட வேண்டும்

“ மதுவின் மயக்கம்,மரணத்தின் தொடக்கம் “

'புகை நமக்குப் பகை'

'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்'

காலைநடை காலுக்குப் பலம்; மாலைநடை மனதுக்குப் பலம்;

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'  ‘வருமுன் காப்போம்!

'வெள்ளம் வரும்முன் அணை போடு'

*சாதனையின்  சிகரங்களே* ! 

கீழ்க்காணும் உரைநடை மேற்கோள் யாவும் 5 மதிப்பெண்ணையும் முழுமையாய் பெறுவதற்காக ஏதுவான மேற்கோளை வினா-விடையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

*உரைநடை மேற்கோள்* 

 *காற்று* *உரைநடை* 

"வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம் உண்டாம் " *-ஔவை குறள்*

"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" 

-(சிலம்பு ) 

"நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் ....." 

 *-(தூது நூல் )* 

"நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக " 

 *-(புறம்  )* 

"வளி மிகின் வலி இல்லை " 

 *-(புறம் )* 

"காற்றே என் வாசல் வந்தாய் 

மெதுவாக கதவு திறந்தாய் ". -( *திரையிசைப்பாடல்*

        **************

*விருந்தோம்பல்* *உரைநடை* 

"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்  ....." 

 *-(சிலம்பு )* 

"தொல்லோர் சிறப்பின்  விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை " 

 *-(சிலம்பு )* 

"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்  ....." 

 *-(இராமாவதாரம் )* 

"விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண 

மேன்மேலும் முகமலரும் மேலோர் போல"  *-(கலிங்கத்துப்பரணி)* 

"கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்  " 

 *-(புறம் )* 

"காலின் ஏழடிப் பின் சென்று "  *-(பொருநராற்றுப்படை )*

            *************

 *செயற்கை நுண்ணறிவு* *உரைநடை*

ஐ.பி.எம் நிறுவன செயற்கை நுண்ணறிவுக் கணினி- *வாட்சன்* 

ஜப்பானின் சாப்ட் வங்கி யின் இயந்திர மனிதன்- *பெப்பர்* 

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் - *பாரதியார்* 

பாரத ஸ்டேட் வங்கி உரையாடு மென்பொருள் - *இலா*

             ***********

 *மொழிபெயர்ப்பு* - *உரைநடை*

"மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்  சங்கம் வைத்தும்" - *சின்னமனூர் செப்பேடு* 

" மொழியின் வியப்பை தூண்டு 

மொழிபெயர்ப்பால் தரணியை தாண்டு" (சுயமாக எழுதியது)

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு - *மணவை முஸ்தபா* 

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் -கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் - *பாரதியார்* 

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் 

பரவும் வகை செய்தல் வேண்டும் - *பாரதியார்*

*10 std - Tamil CBSE Question Bank* 

 *2025-26 Tamil CBSE* *Question* 

https://ceciliasagayam.blogspot.com/2023/09/10-std-tamil-question-paper-2023-24.html

 *9,10 செய்யுள்- இலக்கணம் பயிற்சி வினாக்கள்* 

https://ceciliasagayam.blogspot.com/2024/03/9-tamil-worksheet.html

 *இயல்-1 இலக்கணம் PPT* 

https://ceciliasagayam.blogspot.com/2023/06/1-ppt.html

 *10 std - work sheet -இயல்-1,2,3,4* 

https://ceciliasagayam.blogspot.com/2023/09/10-std-work-sheet-1234.html

 *10 std Tamil Question Paper* 

https://ceciliasagayam.blogspot.com/2023/09/10-std-tamil-question-paper-2023-24.html

 *Tamil CBSE Question Paper* 

https://ceciliasagayam.blogspot.com/2024/02/tamil-cbse-question-paper.html

 *10 std Tamil notes* 

https://ceciliasagayam.blogspot.com/2024/03/10-std-tamil-notes.html

 *10 std Additional language syllabus, model question paper* 

https://ceciliasagayam.blogspot.com/2024/12/10-std-additional-language.html

 *10 std TAMIL MODEL Q.P* 

https://ceciliasagayam.blogspot.com/2024/03/10-std-tamil-model-qp-2024-25.html

 *New Tamil 10 std Text book* 

https://ceciliasagayam.blogspot.com/2025/03/new-tamil-10-std-text-book.html

Comments

Popular posts from this blog

இயல்- 4- துணைப்பாடம்-விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் 1 துணைப்பாடம் உரைநடையின் அணிநலன்கள்.